2025 பிப்ரவரி 18-ஆம் தேதி முதல் 2025 பிப்ரவரி 24-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

தைரியமும், தன்னம்பிக்கையும் கிடைக்கும். வாழ்க்கையில் நீங்கள் நினைப்பது நடக்கும். நடப்பதற்கான சூழ்நிலைகள் இருக்கிறது. நீங்கள் நம்பியவர்கள் உங்களுக்கு உண்மையாகவும், நேர்மையாகவும் இருப்பார்கள். நீங்கள் எடுக்கும் அத்தனை காரியங்களும் வெற்றி அடையும். பொருளாதார நிலைகளை பொறுத்தவரை கையில், பணம், தனம் இருந்தாலும் அதற்கு ஏற்ற செலவினங்களும் இருக்கிறது. எதிர்பாராத வகையில் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். நண்பர்கள் மற்றும் சகோதர - சகோதரிகளால் மகிழ்ச்சி, நன்மைகள் உண்டு. வேலை, வாய்ப்புகள் பிரமாதமாக இருக்கிறது. தேவையில்லாத விஷயங்களில் தலையிடாமல் இருப்பது, யாருக்கும் கடன் கொடுக்காமல் இருப்பது நல்லது. பின்னாளில் இது போன்ற நிகழ்வுகளால் பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளது. உங்கள் தொழிலில் ஏற்றம், சம்பாத்தியம், வருமானங்கள் உண்டு. இந்த வாரம் முழுவதும் விநாயகர் மற்றும் சிவனோடு கூடிய அம்பாளையும் வழிபாடு செய்யுங்கள்.

Updated On 24 Feb 2025 5:31 PM IST
ராணி

ராணி

Next Story