2025 ஜனவரி 28-ஆம் தேதி முதல் 2025 பிப்ரவரி 03-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். உங்கள் கையில் பணம், தனம் இருக்கும். நகை, ஆடை, ஆபரணங்கள் வாங்க ஆசைப்பட்டவர்களுக்கு அதற்கான சந்தர்ப்ப, சூழ்நிலைகள் உள்ளன. நினைத்தது அனைத்தும் நடக்கும். நீங்கள் நம்பியவர்கள் ஏதோவொரு விதத்தில் உங்களுக்கு உதவி செய்வார்கள். எதிர்பாராத பயணம், அந்த பயணத்தால் நன்மைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இளைய சகோதர - சகோதரிகளால் நன்மைகள் உண்டு. நீங்கள் எடுக்கும் காரியங்கள் கைகூடி வரும். எதிர்பார்க்கும் செய்திகள் உங்களுக்கு சாதகமாக வரும். வேலை, வாய்ப்புகள் நன்றாக இருக்கிறது. நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கான அங்கீகாரம் கிடைக்கும். பணிச்சுமை அதிகமாக இருக்கும். அதுபற்றி கவலைப்பட வேண்டாம். போட்டித் தேர்வுகள் எழுதி ரிசல்டுக்காக காத்திருப்பவரக்ள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். வெற்றி என்பது இந்த வாரத்தில் உறுதியாக இருக்கிறது. பேச்சை தொழிலாக கொண்டவர்களுக்கு அதன் மூலம் ஏற்றம், வருமானம், சம்பாத்தியங்கள் உண்டு. தெய்வ அனுகூலத்தை கூட்டுங்கள். இந்த வாரம் முழுவதும், முருகன் மற்றும் இஷ்ட தெய்வத்தை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 3 Feb 2025 5:15 PM IST
ராணி

ராணி

Next Story