2024 டிசம்பர் 31-ஆம் தேதி முதல் 2025 ஜனவரி 06-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
தெய்வ தரிசனத்திற்கு வாய்ப்புகள் இருக்கிறது. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த விற்பனை மற்றும் லாபம் இருக்கிறது. தொழில் நன்றாக உள்ளது. ஆனால், தொழில் தகராறு; தொழில் நிச்சயமற்ற தன்மை இருக்கிறது. அதற்காக தொழில் இல்லாமல் இல்லை. விட்டு விட்டு நடக்கும். மணவாழ்க்கையில் திருப்தியற்ற சூழ்நிலைகள் இருக்கின்றன. வேலை, வாய்ப்புகளை பொறுத்தவரை, வேலை இருக்கிறது. ஆனால், இந்த வேலையில் இருப்போமா அல்லது வேறு வேலைக்கு மாறுவோமா போன்ற எண்ணங்கள் உருவாகும். வேலையில் மாற்றங்கள் நிகழ நிறைய வாய்ப்புள்ளது. நண்பர்கள், மூத்த சகோதர - சகோதரிகள் ஆகியோரால் நன்மைகள் ஏற்படும். புதிதாக காதல் விஷயங்கள், ஜாதி, மதம், மொழிக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் நிகழ வாய்ப்புள்ளது. முறிந்த காதல் மீண்டும் சேரும். பாஸ்போர்ட், விசாவுக்கு விண்ணப்பித்திருந்தால் வரும். உங்களுக்கு அந்தஸ்து, கௌரவம் கூடும். இந்த வாரம் முழுவதும், விநாயகர் மற்றும் இஷ்ட தெய்வத்தை வழிபாடு செய்யுங்கள்.