2024 டிசம்பர் 17-ஆம் தேதி முதல் டிசம்பர் 23-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலம். உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். கல்வி நன்றாக உள்ளது. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த விற்பனை மற்றும் லாபம் இருக்கிறது. வண்டி, வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன. காதல் விஷயங்கள் மகிழ்ச்சி, சந்தோஷத்தை கொடுக்கும். புதிய காதல் மலர வாய்ப்புள்ளது. உங்கள் காதல் வெற்றி அடைந்து திருமணத்தில் முடியும். கையில் பணம், தனம், பொருள் இருக்கும். வேலை, வாய்ப்புகள் பரவாயில்லை. எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். வரவேண்டிய பணங்கள் வராமல் இருந்தால் வந்து சேரும். மணவாழ்க்கை பரவாயில்லை. தொழிலில் தகராறு; நிச்சயமற்ற தன்மை இருக்கிறது. இந்த வாரம் முழுவதும், விநாயகரை வழிபாடு செய்யுங்கள்; சிவ வழிபாட்டை அதிகப்படுத்துங்கள்.
