2024 நவம்பர் 26-ஆம் தேதி முதல் டிசம்பர் 02-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

பொருளாதார நிலைகளை பொறுத்தவரையில், கையில் பணம், தனம் இருந்தால் கூட செலவுகள் அதிகமாகவே இருக்கிறது. புதிய முயற்சிகள் எதுவும் செய்ய வேண்டாம். உறவுகளால் தேவையற்ற பிரச்சினைகள், மன வருத்தங்கள், போராட்டங்கள் ஏற்பட்டு விலகும். நெருங்கிய உறவுகளை விட்டு பிரிந்து இருக்க வேண்டிய காலமாக உள்ளது. இளைய சகோதர - சகோதரிகளாலும் பிரச்சினைகள் உண்டு. அவசரம், அவசியம் இருந்தால் தவிர பயணம் செய்வதை தவிர்த்துவிடுங்கள். வேலையை பொறுத்தவரை சுமாராக உள்ளது. உங்கள் வேலையில் அழுத்தம், பணிசுமை, டென்ஷன் ஆகியவை இருக்கும். அதனால் பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்படுங்கள். இல்லையென்றால் வேலையில் மன உளைச்சல் என்பது இருந்துகொண்டே இருக்கும். காதல் விஷயங்கள் மகிழ்ச்சி, சந்தோஷத்தை கொடுப்பதுபோல் இருந்தாலும் அதிலும் சின்ன சின்ன தடைகள் இருக்கிறது. கடன் கொடுப்பது மற்றும் வாங்குவதை தவிருங்கள். இந்த வாரம் முழுவதும், உங்களின் இஷ்ட தெய்வம் மற்றும் பெண் தெய்வத்தை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 26 Nov 2024 12:01 AM IST
ராணி

ராணி

Next Story