2024 அக்டோபர் 22-ஆம் தேதி முதல் அக்டோபர் 28-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால், நீண்ட நாட்களாக இடம், வீடு, வீட்டு உபயோகப்பொருட்கள் வாங்க நினைத்தவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் இருந்துகொண்டே இருக்கிறது. கடன் வாங்கியாவது இவற்றை நீங்கள் வாங்குவீர்கள். பொருளாதார நிலைகளும் பரவாயில்லை. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த சேல்ஸ், வருமானம் இருக்கிறது. கல்வி நன்றாக உள்ளது. அம்மாவின் அன்பு, ஆதரவு கிடைக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். எதிர்பார்த்த, எதிர்பாராத செய்திகள் உங்களுக்கு நன்மையாக முடியும். சொந்த தொழில், கூட்டுத் தொழில் இரண்டுமே லாபகரமாக இருக்கும். நட்பை மேம்படுத்துங்கள்; இல்லையென்றால் உங்கள் நட்பு வட்டாரம் உங்களை விட்டு பிரிந்து போவதற்கான வாய்ப்புகள் உள்ளன. புதிய காதல் மலரும். ஏற்கனவே முறிந்துபோன காதல் மீண்டும் சேர வாய்ப்புள்ளது. உங்கள் 8-ஆம் இடத்தை அனைத்து கிரகங்களும் பார்த்துக்கொண்டு இருப்பதால் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள்; கடன் வாங்காதீர்கள். அரசு தொடர்பான விஷயங்களில் கவனமாக இருங்கள். பெரிய அளவில் ஷேர் மார்க்கெட், டிரேடிங் ஆகியவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் அடக்கி வாசியுங்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பாப்புலாரிட்டி, பப்ளிசிட்டி இருக்கிறது; ஆனால், வருமானங்கள் இல்லை. அரசியல் வாழ்க்கையில் மாற்றம், முன்னேற்றம் இருக்கிறது. இந்த வாரம் முழுவதும், மகாலட்சுமி மற்றும் சிவன் கோயிலில் இருக்கும் அம்பாளை வழிபாடு செய்யுங்கள்.
