2024 செப்டம்பர் 03-ஆம் தேதி முதல் செப்டம்பர் 09-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்கள் முயற்சிகள் வெற்றியடையும். நீங்கள் நினைப்பது நடக்கும். யாரையாவது ஒருவரை நம்பி காரியத்தில் இறங்கினால் அந்த நம்பிக்கை வீண் போகாது. வாழ்க்கையில் எப்போதெல்லாம் பிரச்சினை, போராட்டம், மனக்குழப்பங்கள், நிம்மதியற்ற சூழல்கள் இருக்கிறதோ அப்போதெல்லாம் அதை தீர்த்து வைப்பதற்கு யாராவது வருவார்கள். யாரை தொடர்பு கொள்ள நினைக்கிறீர்களோ அவர்களை நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள். கண்டிப்பாக நீங்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. வீடு, இடம், ஊர் மாற நினைப்பவர்களுக்கு கண்டிப்பாக மாற்றங்கள் உண்டு. சொத்துக்கள் விற்பனையாகாமல் இருந்தால் நல்ல விலைக்கு போகும். மனக்குழப்பங்கள் நீங்கி தைரியம், தன்னம்பிக்கை பெரிய அளவில் ஏற்படும். எதையும் துணிந்து செயல்படுத்துவதற்கான வாய்ப்பு இந்த வாரத்தில் உண்டு. வேலையை பொறுத்தவரை நன்றாக உள்ளது. வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையிலும் சரி, தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கான அங்கீகாரம் கிடைக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நல்லதொரு புகழ், அந்தஸ்து கிடைக்கும். அரசியல் சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் உங்கள் எதிரிகளை வெற்றி கொள்வீர்கள். சொந்த தொழில் சுமார். கூட்டுத்தொழிலில் நீங்களும், பார்ட்னரும் திருப்தியற்ற மனநிலையில்தான் இருப்பீர்கள். இந்த வாரம் முழுவதும் துர்க்கை மற்றும் காளியை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 9 Sept 2024 9:50 PM IST
ராணி

ராணி

Next Story