2024 செப்டம்பர் 17-ஆம் தேதி முதல் செப்டம்பர் 23-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உயர்கல்வி நன்றாக உள்ளது. விவசாயத்தில் கணிசமான தொகை கிடைக்கும். தொழில் துறையில் சிறு தொழில், சுயதொழில், வீட்டில் வைத்து தொழில், ஆன்லைன் பிசினஸ், குறிப்பாக பிளாட்பார தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம், வருமானம், சம்பாத்தியம் இருக்கிறது. புதிய காதல் விஷயங்கள் மற்றும் ஏற்கனவே காதலித்தால் நிறைய பிரச்சினைகள், தடைகள் ஆகியவை தொடர்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. பெரிய அளவில் ஷேர் மார்க்கெட், டிரேடிங், ஆன்லைன் பிசினஸ் போன்றவற்றில் முதலீடு செய்ய வேண்டாம். எல்லாவிதமான யூக வணிகங்களும் லாபம் தருவது மாதிரியான தோற்றம் இருக்குமே தவிர லாபம் கிடைப்பதில் நிறைய தடைகள் இருக்கின்றன. வேலையை பொறுத்தவரை பரவாயில்லை. மணவாழ்க்கையில் கணவன் - மனைவிக்கிடையில் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள், சண்டை சச்சரவுகள் இருக்கின்றன. கூட்டுத்தொழிலில் பாட்னர் லாபம் அடைவார். வெளிநாட்டு தொடர்பில் பெரிய அளவில் தொழில் செய்ய நினைப்பவர்கள் சுமாரான அளவிலேயே முதலீடு செய்யுங்கள். எது எப்படி இருந்தாலும் உங்களின் கௌரவம், அந்தஸ்து, புகழ் கூடும். அரசாங்கத்தால் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். இந்த வாரம் முழுவதும் சிவதரிசனம் மற்றும் நவக்கிரகத்தில் இருக்கக்கூடிய சனிபகவானை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 23 Sep 2024 5:35 PM GMT
ராணி

ராணி

Next Story