2024 ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் செப்டம்பர் 02-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
கல்வி நன்றாக உள்ளது. அப்பா - அம்மா இருவரின் அன்பு, ஆதரவு உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். வேலையில் மாற்றம் செய்ய நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் இருந்துகொண்டே இருக்கிறது. எந்த துறையில் பணியாற்றினாலும் செய்யும் வேலையை திருப்தியோடு செய்யுங்கள். உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். உங்கள் காதல் விஷயங்கள் வெற்றியடையவும், அந்த காதல் திருமணத்தில் முடியவும் வாய்ப்புள்ளது. ஜாதி, மத, மொழிக்கு அப்பாற்பட்ட தொடர்புகள் ஏற்பட்டு விலகும். பெரிய அளவில் கடன் வாங்காதீர்கள். அந்த கடனை திருப்பி அடைக்க வாய்ப்புகள் குறைவாக உள்ளது. தேவையில்லாத விஷயங்களில் தலையிடாதீர்கள். மணவாழ்க்கையை பொறுத்தவரை கணவன் - மனைவி உறவில் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் இருக்கிறது. சொந்த தொழிலும் சுமார். கூட்டுத்தொழிலில் பார்ட்னருக்காக உழைக்க நேரிடும். அவர் லாபம் அடைவார். முன்னுக்கு வர வேண்டும் என்று நீங்கள் எடுக்கும் காரியங்கள் அத்தனையையும் நிறுத்தி, நிதானமாக செயல்படுத்துங்கள். தேவை இருந்தால் மட்டும் பயணம் செய்யுங்கள். பயணத்தால் பிரச்சினை இருக்கிறது. உடம்பில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால் இம்யூனிட்டி பவரை அதிகப்படுத்துங்கள். இந்த வாரம் முழுவதும் விநாயகரையும், மகாலட்சுமியையும் வழிபாடு செய்யுங்கள்.