2024 ஆகஸ்ட் 20-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 26-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
நீண்ட நாட்களாக இடம், வீடு, வீட்டு உபயோகப்பொருட்கள், நகைகள் வாங்க நினைத்தவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள், சந்தர்ப்பங்கள் இருக்கிறது. கல்வி நன்றாக உள்ளது. கையில் பணம், தனம் இருக்கும். துணிந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். அந்த முடிவுகள் பின்னால் வெற்றிகளை தரும். வேலை நிமித்தமாக எதிர்பாராத பயணம் இருக்கிறது. அந்த பயணம் திருப்தியற்ற மனநிலையை கொடுக்கும். சொந்த தொழில் சுமாராக உள்ளது. உங்கள் உழைப்பு மற்றவர்களுக்கு லாபம். கூட்டுத்தொழிலில் பார்ட்னர் லாபம் அடைவார். வேலையை பொறுத்தவரை நிறைய தடைகள், பிரச்சினைகள் இருக்கிறது. எந்த துறையில் பணியாற்றினாலும், உங்கள் வேலையில் நிறைய முயற்சி எடுத்து செய்யுங்கள். அப்போதுதான் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். இல்லையென்றால் வேலையில் நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் அமையாது. மேலும் உடன் பணியாற்றுபவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளால் போராட்டங்கள் உண்டு. திருமணம் நடைபெறாதவர்களுக்கு அதற்கான வாய்ப்பு, சந்தர்ப்பங்கள் உண்டு. உங்களின் கௌரவம், அந்தஸ்து, புகழ், செல்வம், செல்வாக்கு, கீர்த்தி காப்பாற்றப்படும். ஷேர் மார்க்கெட், டிரேடிங், ஆன்லைன் பிசினஸ், மியூச்சுவல் பண்ட் ஆகியவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் செய்யுங்கள். அதனால் வருமானங்கள் கிடைப்பதற்கான சூழ்நிலைகளை கிரகங்கள் ஏற்படுத்தி கொடுக்கும். அதற்காக பெரிய அளவில் கடன் வாங்கி செய்ய வேண்டாம். இந்த வாரம் முழுவதும் மகாலட்சுமி மற்றும் முருகனை வழிபாடு செய்யுங்கள்.