2024 அக்டோபர் 01-ஆம் தேதி முதல் அக்டோபர் 07-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
பொருளாதாரம் நன்றாக உள்ளது. கையில் பணம், தனம், பொருள் இருக்கும். எடுக்கும் முயற்சிகள் சுமாரான அளவில் வெற்றி பெறும். இளைய சகோதர - சகோதரிகளுக்கு சுபகாரியங்கள் நடக்க வாய்ப்புள்ளது. வேலையாட்கள் உங்களைவிட்டு பிரிந்து போக வாய்ப்புள்ளது. வழக்குகள் இருந்தால் ஜெயிக்க வாய்ப்பில்லை. அதனால், எல்லா விஷயங்களிலும் பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்படுங்கள். பெரிய அளவில் ஷேர் மார்க்கெட், டிரேடிங், மியூச்சுவல் பண்ட், லாட்டரி, ரேஸ் ஆகியவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் செய்யலாம். அதற்கான வாய்ப்புகள் சாதகமாக உள்ளது. கல்வி மற்றும் தயாரிப்பு துறையில் இருப்பவர்களுக்கு நேரம் நன்றாக உள்ளது. அம்மா, அப்பா இருவரின் அன்பும் ஆதரவும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. எதிர்பாராத பணவரவு இருக்கிறது. கணவன் அல்லது மனைவி மூலமாக பொருள் வரவு இருக்கிறது. பென்ஷன், பிஎஃப், கிராஜிவிட்டி, இன்சூரன்ஸ் ஆகிய பணங்கள் வராதவர்களுக்கு, வந்துசேர வாய்ப்புகள் நிறைய உண்டு. உயர்கல்வி நன்றாக உள்ளது. ஒன்றிற்கும் மேற்பட்ட தொழில்கள் தொடங்குவதற்கான சூழல்கள் உருவாகும். வாரம் முழுவதும் சிவன் மற்றும் முருகனை பிரதானமாக வழிபாடு செய்யுங்கள்.
