2024 ஆகஸ்ட் 13-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 19-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

சொந்தமாக இடம், வீடு, வண்டி, வாகனம், வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவை வாங்குவதற்கான வாய்ப்புகள் கிரக ரீதியாக நிறைய இருக்கிறது. பொருளாதார ரீதியாக அம்மாவின் அன்பு, ஆதரவு கிடைக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் ஏதோவொரு வகையில் சாதகமாக இருக்கும். உங்களின் எண்ணங்கள், சிந்தனைகள் செயலாக்கம் பெரும். சில முடிவுகளை துணிந்து எடுப்பீர்கள். ஷேர் மார்க்கெட், டிரேடிங், ஆன்லைன் பிசினஸ் செய்ய நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் இல்லை. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பாப்புலாரிட்டி, பப்ளிசிட்டி இருக்கிறது. வருமானங்கள் சுமார். எதிர்பாராத தெய்வ தரிசனம், ஆலய தரிசனம் இருக்கிறது. எதிர்பார்த்த மாதிரியான வருமானம், சம்பாத்தியம் குறைவு. யாருக்காவது கடன் கொடுத்தால் அவற்றை வாங்குவதிலும், திரும்ப கொடுப்பதிலும் நிறைய பிரச்சினைகள் இருக்கிறது. எது எப்படி இருந்தாலும் உங்களின் கௌரவம், அந்தஸ்து, புகழ் கூடும். ஸ்டார்ட் அப் நிறுவனம், பெரிய நிறுவனம் தொடங்க நினைப்பவர்களுக்கும், தொழில் முனைவோராக வர ஆசைப்படுபவர்களுக்கும் அதற்கான வாய்ப்புகள் உள்ளது. நட்பு வட்டாரத்தை டெவலப் செய்யுங்கள். இல்லையென்றால் அவர்கள் உங்களை விட்டு பிரிந்து போவதற்கான வாய்ப்புகள் உள்ளது. தேவையில்லாமல் கடன் வாங்க வேண்டாம். ஷேர் மார்க்கெட், டிரேடிங் போன்ற எதிலும் முதலீடு செய்ய வேண்டாம். இந்த வாரம் முழுவதும், விநாயகர் மற்றும் பெருமாளை தரிசனம் செய்யுங்கள்.

Updated On 13 Aug 2024 9:27 AM IST
ராணி

ராணி

Next Story