2024 ஜனவரி 9 முதல் ஜனவரி 15-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

பொருளாதாரம் நன்றாக இருக்கும். சிறுசிறு தடைகள் ஏற்பட்டாலும் முயற்சிகள் வெற்றியடையும். உறவுகளிடம் நன்றாக நடந்துகொள்ளுங்கள். தேவை இருந்தால் மட்டுமே பயணிக்கவும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டு. மெக்கானிக்கல், ஆட்டோ, சிவில், கெமிக்கல் துறைகளில் இருப்பவர்களுக்கு ஏற்றம் உண்டு. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ் மற்றும் வருமானம் கிடைக்கும். அரசியல் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். புது காதல் மலர வாய்ப்புள்ளது. வேலையில் சிறு சிறு தடைகள் வரலாம். அதிருப்தி ஏற்படும். பார்ட்னர்ஷிப் பிஸினஸில் இருவரும் லாபமடைவீர்கள். மூத்த சகோதர, சகோதரிகளால் நன்மை கிடைக்கும். நண்பர்களால் மகிழ்ச்சி உண்டாகும். மகாலட்சுமி மற்றும் சிவனை வழிபட, சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

Updated On 8 Jan 2024 6:30 PM GMT
ராணி

ராணி

Next Story