✕
x
2024 ஜனவரி 16 முதல் ஜனவரி 22-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
பொருளாதார நிலைகள் நன்றாக உள்ளது. முயற்சிகள் வெற்றியடையும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மூத்த சகோதர சகோதரிகளால் நன்மை உண்டு. நண்பர்களால் மகிழ்ச்சி, சந்தோஷம் கிடைக்கும். வீடு, இடம் மற்றும் ஊர் மாற நினைப்பவர்களுக்கு அதற்கான சூழல் சிறப்பாக உள்ளது. சொத்துக்கள் உங்கள் கையை விட்டுப் போவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. இடம் வாங்குவதற்கான சூழல் உள்ளது. வரவேண்டிய பண வரவுகள் வந்து சேரும். கணவன் அல்லது மனைவி மூலமாக பொருள் வரவு உள்ளது. முன்னோர்களின் சொத்துக்கள் வந்து சேரும். அப்பா மற்றும் மனைவியின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். சிவன் மற்றும் முருகன் வழிபாடு ஏற்றத்தை தரும்.

ராணி
Next Story