ஆரம்பத்தில் சற்று சுணக்க நிலை இருந்தாலும், இறுதியில் வெற்றியே கிட்டும். இளம்பருவத்தினருக்கு ஜென்ம சனி நடப்பதால், பணம் என்பது என்ன? உறவுகள் எப்படிப்பட்டது? நண்பர்கள் உதவுவார்களா? மாட்டார்களா? எது நல்லது? எது கெட்டது? என்பதை உணரும் நிலை ஏற்படும் என்பதால் சற்று கவனமாக நடந்துகொள்ள வேண்டும். அதேபோல் இளம்பருவத்தினருக்கு காதல் வரும். அதற்கு பின்னாலே மன அழுத்தமும் வரும். அடுத்த ஆண்டு முடியக்கூடிய காதல் இந்த மாதம் தொடங்கும் என்பதால் ஆண், பெண் இருபாலருக்கும் அறிமுகங்கள் கிடைக்கும். இந்த அனுபவம் ஒரு பாடமே! உழைப்பாளிகளுக்கு சாதகமற்ற தன்மை வராது.

Updated On 12 July 2023 3:15 PM IST
ராணி

ராணி

Next Story