2025 ஏப்ரல் 08-ஆம் தேதி முதல் 2025 ஏப்ரல் 14-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
சொத்துக்கள், இடம், வீடு வாங்குவதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன. திருப்தியற்ற மனநிலையில் இருப்பதற்கான சூழ்நிலைகளும் இருக்கின்றன. நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். இளைய சகோதர - சகோதரிகள் இருந்தால் நன்மை. உறவுகளால் நற்பலன்கள் உண்டு. தைரியமாகவும், தன்னம்பிக்கையாகவும் சில முடிவுகள் எடுப்பீர்கள். அந்த முடிவுகள் உங்கள் வாழ்க்கையில் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு ஏற்றத்தையும், முன்னேற்றத்தையும் கொடுக்கும். உங்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு யாராவது வருவார்கள். இறைவன் தோன்றாத்துணையாக இருந்து அனுகூலம் பண்ணுவார். உங்கள் சொத்துக்கள் எதிர்பார்த்த விலைக்கு போகும். சொந்த தொழில், கூட்டுத் தொழில் இரண்டுமே நன்றாக உள்ளது. எது எப்படி இருந்தாலும் உங்களின் அந்தஸ்து, புகழ், செல்வம், செல்வாக்கு, கீர்த்தி காப்பாற்றப்படும். எதிர்பாராத நட்பு, அந்த நட்பால் ஏற்றம், முன்னேற்றம் உண்டு. எதிர்பாராத பொருள் வரவு, தனவரவு இருக்கிறது. உங்கள் கையில் பணம், தனம், பொருள் இருக்கும். பேச்சின் மூலமாக வருமானத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. தேவையற்ற மன வருத்தங்கள், பிரச்சினைகள் ஏற்படும். இந்த வாரம் முழுவதும், விநாயகர் மற்றும் காளியை பிரதானமாக வழிபாடு செய்யுங்கள்.
