2025 மார்ச் 25-ஆம் தேதி முதல் 2025 மார்ச் 31-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
பேச்சின் மூலமாக வருமானம் உண்டு. அதேநேரம், தேவையற்ற பேச்சுக்களை தவிருங்கள். இடம், வீடு, வீட்டு உபயோகப்பொருட்கள், வண்டி, வாகனங்கள் ஆகியவை வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆடை, ஆபரணங்கள் வாங்குவதற்கான சந்தர்ப்ப, சூழ்நிலைகளும் உள்ளன. தேவையில்லாதவற்றை பேசாமல் அடக்கி வாசியுங்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ், அந்தஸ்து கிடைக்கும். ஆனால், வருமானங்கள் சுமார். ஷேர் மார்க்கெட், டிரேடிங், ஆன்லைன் பிசினஸ் ஆகியவற்றில் கொஞ்சம் அடக்கி வாசியுங்கள். லாபம் கிடைப்பதில் நிறைய தடைகள் இருக்கிறது. திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு திருமணம் நடைபெறும் அல்லது அது குறித்த பேச்சுவார்த்தைகள் நடக்கும். யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். கணவன் - மனைவி உறவில் கருத்து வேறுபாடுகள், சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு விலகும். எது எப்படி இருந்தாலும் உங்களின் அந்தஸ்து, புகழ் கூடும். நல்ல நண்பர்கள் அமைவார்கள். நண்பர்களால் உங்கள் வாழ்க்கையில் மாற்றம், முன்னேற்றம் ஏற்படும். இந்த வாரம் முழுவதும், துர்க்கை வழிபாடு மற்றும் காளியை தரிசனம் செய்யுங்கள்.
