2025 மார்ச் 18-ஆம் தேதி முதல் 2025 மார்ச் 24-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இடம், ஆடை, ஆபரணங்கள் வாங்குவதற்கான சந்தர்ப்ப, சூழ்நிலைகள் உள்ளன. கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். உங்கள் கையில் பணம், தனம் இருக்கும். வேலை, வாய்ப்புகள் பரவாயில்லாமல் இருக்கிறது. வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் நிறைய உண்டு. தொழில் முனைவோராக வர நினைத்தவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உள்ளன. திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு திருமணம் நடைபெறும் அல்லது அது குறித்த பேச்சுவார்த்தைகள் நடக்கும். தொழில் லாபகரமாக இருக்கும். அரசியல் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு பப்ளிசிட்டி இருக்கிறது. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ், அந்தஸ்து கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். நல்ல நட்பு உங்களை விட்டு பிரிந்து போவதற்கான வாய்ப்பு நிறையவே உள்ளது. எந்த துறையில் பணியாற்றினாலும் உங்கள் வேலையை திருப்தியோடு செய்யுங்கள். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த சேல்ஸ் இருக்கிறது. விவசாயம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு ஓரளவுக்கு லாபம் கிடைக்கும். இந்த வாரம் முழுவதும், முழுமுதற் கடவுளாம் விநாயகர் மற்றும் சிவன் கோயிலில் இருக்கக்கூடிய நந்திகேஸ்வரரை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 18 March 2025 12:02 AM IST
ராணி

ராணி

Next Story