2025 பிப்ரவரி 25-ஆம் தேதி முதல் 2025 மார்ச் 03-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
கல்வி நன்றாக உள்ளது. நிரந்தரமான சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். புரொடக்ஷன் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு உற்பத்திக்கு தகுந்த லாபம், வருமானம் உண்டு. அம்மாவின் அன்பு, ஆதரவு கிடைக்கும். பண சுழற்சி நன்றாக இருப்பதால் உங்கள் கையில் பணம், தனம், பொருள் இருக்கும். எது முதலில், இரண்டாவது என்று துணிந்து சில முடிவுகளை எடுங்கள். இல்லை என்றால் நிறைய போராட்டங்கள் இருக்கிறது. உங்களின் கௌரவம், அந்தஸ்து, புகழ் கூடும். புதிய காதல் உருவாகும். உங்கள் காதல் விஷயங்கள் திருமணத்தில் முடியும். இதுவரை திருமணம் நடைபெறவில்லை என்றால் திருமணம் அல்லது அது சம்மந்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெறும். தொழில் நன்றாக உள்ளது. உங்கள் தொழிலால் நல்ல லாபம், ஏற்றம், வருமானம், சம்பாத்தியங்கள் உள்ளன. எதிர்பாராத பொருள் வரவு, தனவரவு உண்டு. நல்ல நண்பர்கள் உங்களை விட்டு பிரிந்து போவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் நட்பை மேம்படுத்துங்கள். வேலை, தொழில் இரண்டும் பரவாயில்லாமல் இருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துங்கள். இந்த வாரம் முழுவதும், பைரவர் மற்றும் நரசிம்மரை வழிபாடு செய்யுங்கள்.
