2025 பிப்ரவரி 18-ஆம் தேதி முதல் 2025 பிப்ரவரி 24-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்கள் கௌரவம், அந்தஸ்து, புகழ் கூடும். பெரிய அளவில் தொழில் நிறுவனம் தொடங்க வேண்டும், தொழில் முனைவோராக வர வேண்டும் என்று நினைப்பவர்கள் முயற்சி செய்யுங்கள். கண்டிப்பாக நிறைய வாய்ப்புகள் உள்ளன. நட்பு வட்டாரத்தில் கவனமாக இருங்கள். நல்ல நண்பர்கள் உங்களை விட்டு பிரிந்து போவதற்கான வாய்ப்புகள் நிறைய உண்டு. பொருளாதார நிலைகளை பொறுத்தவரை நகை, இடம், வீடு, வண்டி, வாகனங்கள், புதிய பொருட்கள் ஆகியவை வாங்குவதற்கு வாய்ப்புகள் உண்டு. ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்பவர்களுக்கு சுமார். டிரேடிங் செய்பவர்கள் அடக்கி வாசியுங்கள். மியூச்சுவல் ஃபண்ட்டில் முதலீடு செய்வது, இன்ட்ரா டிரேடிங் செய்வது போன்றவற்றிலும் கவனம் தேவை. எந்தவிதமான யூக வணிகங்களும் உங்களுக்கு சாதகமாக இல்லை. மணவாழ்க்கை மகிழ்ச்சி, சந்தோஷகரமாக இருக்கும். உங்கள் காதல் வெற்றி பெறுவதில் சின்ன சின்ன தடைகள் இருக்கிறது. உயர்கல்வி நன்றாக உள்ளது. அப்பாவின் அன்பு, ஆதரவு கிடைக்கும். வேலையில் வேறு அலுவலகம் மாற நினைப்பவர்கள் முயற்சி செய்யுங்கள். இந்த வாரம் முழுவதும், விநாயகர் மற்றும் சனிபகவானை வழிபாடு செய்யுங்கள்.
