✕
x
2025 பிப்ரவரி 04-ஆம் தேதி முதல் 2025 பிப்ரவரி 10-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
கல்வி நன்றாக உள்ளது. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த சேல்ஸ் இருக்கிறது. இடம், வீடு வாங்க வாய்ப்புகள் உள்ளது. அம்மாவின் அன்பு, ஆதரவு கிடைக்கும். ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் பொறுமையாக இருங்கள். எந்தவிதமான யூக வணிகங்களும் லாபகரமாக இல்லை. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ், அந்தஸ்து இருக்கிறது. வருமானங்கள் சுமார். அரசியல் மற்றும் வேலை சுமார். கிடைக்கிற வேலையை தக்க வைத்துக்கொள்ளுங்கள். திருமணம் நடக்கவில்லை என்பவர்களும் கொஞ்சம் காத்திருங்கள். இந்த வாரம் முழுவதும், விநாயகர் மற்றும் துர்க்கையை வழிபாடு செய்யுங்கள்.
ராணி
Next Story