2025 ஜனவரி 14-ஆம் தேதி முதல் 2025 ஜனவரி 20-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
வீடு, மனை, வண்டி, வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. கல்வி நன்றாக உள்ளது. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த சேல்ஸ் இருக்கிறது. ஓரளவுக்கு லாபமும் கிடைக்கும். அம்மாவின் அன்பு, ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத பயணம்; அந்த பயணத்தால் நன்மைகள் உண்டு. இளைய சகோதர - சகோதரிகளால் நன்மை; நெருங்கிய உறவுகளால் நற்பலன்கள் அத்தனையும் இருக்கிறது. நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். நேர்முகத் தேர்வுகளில் கலந்து கொண்டிருந்தால் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளது. ஷேர் மார்க்கெட், மியூச்சுவல் ஃபண்ட் ஆகியவற்றில் சுமாரான அளவில் முதலீடு செய்யலாம். உடல் உழைப்பு இல்லாமல் சம்பாத்தியம் செய்ய வாய்ப்புள்ளது. எதிர்பாராத பொருள் வரவு, தனவரவு உண்டு. தொழில் சுமாராக உள்ளது. தொழில்முனைவோராக வர நினைப்பவர்கள் முயற்சி செய்யுங்கள். உங்களின் அந்தஸ்து, புகழ், கௌரவம் கூடும். இந்த வாரம் முழுவதும், சிவன் மற்றும் மகா கணபதியை வழிபாடு செய்யுங்கள்.