2025 ஜனவரி 07-ஆம் தேதி முதல் 2025 ஜனவரி 13-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
கல்வியில் கவனம் செலுத்துங்கள். தொழில் நன்றாக உள்ளது. சிறு தொழில், சுயதொழில், வீட்டில் வைத்து தொழில், பிளாட்பார தொழில், ஆன்லைன் தொழில் என எந்த தொழில் செய்பவர்களுக்கும் துறைகளில் லாபம், வருமானங்கள் உண்டு. உங்கள் காதல் வெற்றியடையும். மணவாழ்க்கையில் இருந்த பிரச்சினைகள் தீரும். உயர்கல்வி நன்றாக உள்ளது. வேலை மாற்றம் செய்ய நினைப்பவர்கள் செய்யுங்கள். அம்மாவுடைய அன்பு, ஆதரவு கிடைக்கும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு ஓரளவு லாபம் உண்டு. அம்மாவுடைய அன்பு, ஆதரவு கிடைக்கும். விவசாயம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு நல்லதொரு ஏற்றம், முன்னேற்றம் இருக்கிறது. தேவையில்லாத குழப்பங்கள், சிந்தனைகள் வேண்டாம். எது எப்படி இருந்தாலும் உங்களின் அந்தஸ்து, புகழ், கௌரவம் கூடும். இந்த வாரம் முழுவதும், விநாயகர் மற்றும் இஷ்ட தெய்வத்தை வழிபாடு செய்யுங்கள்.