2024 டிசம்பர் 31-ஆம் தேதி முதல் 2025 ஜனவரி 06-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
நிரந்தரமான சொத்துக்களை வாங்க வாய்ப்புள்ளது. அம்மாவுடைய அன்பு, ஆதரவு கிடைக்கும். கல்வி நன்றாக உள்ளது. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த நல்ல விற்பனை, லாபம் மற்றும் வருமானங்கள் இருக்கிறது. குழந்தைகள் இருந்தால் அவர்களை விட்டு பிரிந்து இருக்க வேண்டிய காலமாக உள்ளது. ஸ்டாக் மார்க்கெட், ஷேர், ரேஸ் போன்றவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் செய்யுங்கள். டிஜிட்டல் கரன்சி, லாட்டரி போன்றவற்றை வாங்க நினைப்பவர்கள் வாங்கலாம். பிட்காயின், கிரிப்டோ கரன்சி போன்றவற்றில் ஓரளவு முதலீடு செய்யலாம். எதிர்பாராத பண வரவு, பொருள் வரவு இருக்கிறது. காதல் விஷயங்கள், ஜாதி, மதம், மொழிக்கு அப்பாற்பட்ட தொடர்புகள் போன்ற நிகழ்வுகளும் உள்ளன. உங்கள் தொழில் லாபம், மகிழ்ச்சி, சந்தோஷம் ஆகியவற்றை கொடுக்கும். கூட்டுத்தொழிலில் நீங்களும், பார்ட்னரும் லாபம் அடைவீர்கள். முன்னோர்களுடைய சொத்துக்கள் வரும். பேச்சின் மூலமாக வருமானம் கிடைக்கும். இந்த வாரம் முழுவதும், மகாலட்சுமி மற்றும் விநாயகரை வழிபாடு செய்யுங்கள்.