2024 டிசம்பர் 24-ஆம் தேதி முதல் டிசம்பர் 30-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
கையில் பணம், தனம், மணி ரொட்டேஷன் என்பது இருக்கிறது. வேலை வாய்ப்புகள் பிரமாதமாக உள்ளது. உங்கள் வேலையில் உங்களுக்கான முன்னேற்றம், அங்கீகாரம் இருக்கிறது. போட்டித் தேர்வுகள் எழுதி ரிசல்ட் வந்தால் வெற்றி பெறுவீர்கள். லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். வழக்குகள் இருந்தால் விடுபடுவதற்கான வாய்ப்பு, ஜெயிப்பதற்கான சூழ்நிலைகள் உள்ளன. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். மணவாழ்க்கை மகிழ்ச்சி, சந்தோஷகரமாக இருக்கும். உங்கள் பிசினஸ் லாபகரமாக இருக்கும். கூட்டுத்தொழிலில் இரண்டு தரப்பினரும் லாபம் அடைவீர்கள். எது எப்படி இருந்தாலும் உங்களின் கௌரவம், அந்தஸ்து, புகழ் கூடும். தொழிலை விரிவுபடுத்த நினைப்பவர்களுக்கு ஏற்றமான வாரமாக இருக்கும். இந்த வாரம் முழுவதும், பைரவர் மற்றும் நரசிம்மரை வழிபாடு செய்யுங்கள்.
