2024 டிசம்பர் 10-ஆம் தேதி முதல் டிசம்பர் 16-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்களை அறியாத தைரியம், தன்னம்பிக்கை இருக்கும். நீங்கள் நினைப்பது நடக்கும். கடந்த காலங்களில் தொழில் தொடங்க நினைத்தவர்களுக்கு அதற்கான சூழ்நிலைகள் உருவாகும். சிறு தொழில், சுயதொழில், வீட்டில் வைத்து தொழில், ஆன்லைன் பிசினஸ், செய்பவர்களுக்கு சுமாராக இருக்கிறது. உங்களின் கௌரவம், அந்தஸ்து, புகழ் கூடும். பெரிய அளவில் ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்க நினைத்தவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உள்ளன. டாக்குமெண்டுகளில் இருந்த பிரச்சினைகள் தீரும். வீடு மாற்றம் உண்டு. விற்பனையாகாமல் இருந்த சொத்துக்கள் நல்ல விலைக்கு போகும். புதிய காதல் மலரும். ஏற்கனவே காதலித்தால் அந்த காதல் வெற்றி பெறும். தொழிலில் பெரிய அளவில் வர வாய்ப்புள்ளது. வேலை, வாய்ப்புகள் பிரமாதமாக இருக்கிறது. லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். நல்ல வேலையாட்கள் அமைவார்கள். நேரடியான, மறைமுகமான எதிரிகளை ஜெயிப்பீர்கள். நல்ல நட்பு உங்களை விட்டு பிரிந்து போக வாய்ப்புள்ளது. மூத்த சகோதர - சகோதரிகளை திருப்திப்படுத்துங்கள். இந்த வாரம் முழுவதும் விநாயகரையும், பெருமாள் கோயிலில் இருக்கும் மகாலட்சுமியையும் வழிபாடு செய்யுங்கள்.

Updated On 10 Dec 2024 12:01 AM IST
ராணி

ராணி

Next Story