2024 டிசம்பர் 03-ஆம் தேதி முதல் டிசம்பர் 09-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
வருமானங்கள் சுமாராக இருக்கிறது. டாக்குமெண்டுகளில் இருந்த பிரச்சினைகள் தீரும். எதிர்பாராத பயணம் இருக்கிறது. குறிப்பாக வேலை நிமித்தமான அந்த பயணம் வாழ்க்கையில் உங்களுக்கு வெற்றிகளை கொடுப்பதற்கான வாய்ப்பாக இருக்கலாம். வீடு மாற்றம், இடமாற்றம் உண்டு. விற்பனையாகாத சொத்துக்கள் நல்ல விலைக்கு போக வாய்ப்புள்ளது. சிறு தொழில், சுயதொழில், வீட்டில் வைத்து தொழில், ஆன்லைன் பிசினஸ், பிளாட்பார தொழில் செய்பவர்களுக்கு வருமானம் இருக்கிறது. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த சேல்ஸ் இருக்கிறது. ஆனால், லாபம் குறைவாக உள்ளது. உயர்கல்வி நன்றாக உள்ளது. ஆராய்ச்சி செய்வதாக இருந்தால் செய்யலாம். பி.ஆர், கிரீன் கார்டு, சிட்டிசன்ஷிப்புக்கு விண்ணப்பித்திருந்தால் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. புதிய காதல் மலரும். அந்த காதல் வெற்றியடையும். ஜாதி, மதம், மொழிக்கு அப்பாற்பட்ட தொடர்புகள் ஏற்படும். பெரிய அளவில் செய்யக்கூடிய தொழில் பாப்புலாரிட்டி, அந்தஸ்தை கொடுக்கும். நல்ல நட்பு உங்களை விட்டு பிரிந்து போக வாய்ப்புள்ளதால் நட்பு வட்டாரத்தை மெயின்டெயின் செய்யுங்கள். சொத்துக்களை விற்க, வாங்க வாய்ப்புள்ளது. ஷேர் மார்க்கெட், டிரேடிங், ஆன்லைன் பிசினஸ், டிஜிட்டல் கரன்சி ஆகியவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் முதலீடு செய்யுங்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ், அந்தஸ்து, அரசியலில் இருப்பவர்களுக்கு ஏற்றம் ஆகியவை இருக்கிறது. இந்த வாரம் முழுவதும் பெண் தெய்வ வழிபாட்டை அதிகப்படுத்துங்கள்.