2024 நவம்பர் 26-ஆம் தேதி முதல் டிசம்பர் 02-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
தொழில் நன்றாக உள்ளது. மணவாழ்க்கை மகிழ்ச்சி, சந்தோஷகரமாக இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். வேலை தேடுபவர்கள், வேறு வேலை, வேறு நிறுவனம் மாற நினைப்பவர்களுக்கு இந்த வாரம் பரவாயில்லை. உடல் உழைப்பு சார்ந்த சம்பாத்தியம் இருந்துகொண்டே இருக்கும். லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்க நினைத்தவர்களுக்கு அது அமையும். கல்வி பரவாயில்லை. கல்விக்காக வெளிநாடு, வெளிமாநிலம் செல்ல நினைப்பவர்கள் முயற்சி செய்யுங்கள். வேலையில் சம்பள உயர்வையோ, பொருளாதார நிலைகளையோ எதிர்பார்த்து காத்திருந்தாள் கிடைக்கும். உங்களுடைய முயற்சிகள், சிந்தனைகள் செயலாக்கம் பெறும். யாரை நம்பி இருக்கிறீர்களோ அவர்கள் கண்டிப்பாக உதவி செய்வார்கள். நீங்கள் யாரை தொடர்பு கொள்ள நினைக்கிறீர்களோ அவை வெற்றிபெறும். குறிப்பாக சிறு தொழில், சுயதொழில், வீட்டில் வைத்து தொழில், பிளாட்பார தொழில் செய்பவர்களுக்கு நன்றாக உள்ளது. எது எப்படி இருந்தாலும் உங்களின் கௌரவம், அந்தஸ்து, புகழ் கூடும். ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்க நினைப்பவர்கள் இந்த வாரத்தில் தொடங்குங்கள். நீங்கள் நினைப்பது நடக்கும். எதிர்பாராத செய்திகள் உங்களுக்கு சாதகமாக வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். நண்பர்கள் குறிப்பாக பெண் நண்பர்களால் நற்பலன்கள் உண்டு. இந்த வாரம் முழுவதும் முழுமுதற் கடவுளாம் விநாயகரை தரிசனம் செய்யுங்கள்.
