2024 நவம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 25-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
பொருளாதார நிலைகள் பரவாயில்லை. இடம், வீடு, வண்டி, வாகனங்கள், வீட்டு உபயோகப்பொருட்கள், ஆடை, ஆபரணங்கள் அகியவை கடன் வாங்கியாவது வாங்குவதற்கான, வாய்ப்புகள், சந்தர்ப்ப சூழ்நிலைகள் உள்ளன. கல்வி நன்றாக உள்ளது. அம்மாவின் அன்பு, ஆதரவு கண்டிப்பாக கிடைக்கும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த விற்பனை மற்றும் வருமானம் இருக்கிறது. வேலை, வாய்ப்புகள் சிறப்பாக இருக்கிறது. அரசு, தனியார் என எந்த துறையில் பணியாற்றினாலும் வேலையை பொறுத்தவரை நன்றாக உள்ளது. கிரக நிலைகள் சாதகமாக உள்ளதால் பணி உயர்வு, சம்பள உயர்வு ஆகியவை இருக்கிறது. போட்டித் தேர்வுகள் எழுதி ரிசல்ட்டுக்காக காத்திருந்தால் அதில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஷேர் மார்க்கெட், டிரேடிங், மியூச்சுவல் ஃபண்ட், லாட்டரி, ரேஸ் போன்ற எந்த வியூக வணிகங்களில் முதலீடு செய்வதாக இருந்தாலும் நன்றாக உள்ளது. முதலீடு நன்றாக இருக்கிறது என்பதற்காக பெரிய அளவில் இல்லாமல் சுமாரான அளவில் மட்டும் முதலீடு செய்யுங்கள். வாரம் முழுவதும் முழுமுதற் கடவுளாம் விநாயகரை வழிபாடு செய்யுங்கள்.
