2024 அக்டோபர் 08-ஆம் தேதி முதல் அக்டோபர் 14-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

பொருளாதாரம் நன்றாக உள்ளது. பேச்சின் மூலமாக வருமானத்தை சம்பாதிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது. கிரக நிலைகள் சாதகமாக இல்லாததால் புதிய முயற்சிகள் ஏதும் வேண்டாம். அதேபோன்று உங்கள் அச்சீவ்மென்ட் குறித்து சிந்தியுங்கள். ஆனால், செயல்படுத்தி விடாதீர்கள். அதுவும் வெற்றி பெற வாய்ப்புகள் இல்லை. தெளிவான சிந்தனைகள் வருவதற்கான வாய்ப்பே உருவாகாது. உங்களுக்கு உதவி செய்வதாக கூறியவர்கள், உதவி செய்ய வாய்ப்பே இல்லை. பெரிய அளவில் ஷேர் மார்க்கெட், லாட்டரி, ரேஸ் போன்ற யூக வணிகங்களில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு வாய்ப்புகள் இல்லை. வேலையை பொறுத்தவரை பரவாயில்லை. சுய தொழிலில் பணம், பொருள் முடங்க வாய்ப்புள்ளது. எது எப்படி இருந்தாலும் உங்கள் வேலை மற்றும் தொழிலில் திருப்தியற்ற மனநிலையில்தான் இருப்பீர்கள். தொழில் தகராறு, தொழில் நிச்சயமற்ற தன்மை என்பது இருக்கிறது. அதற்காக தொழில் இல்லாமல் இல்லை. விட்டுவிட்டு நடக்கும். உங்களின் கௌரவம், அந்தஸ்து, புகழ் ஏதோவொரு விதத்தில் காப்பாற்றப்பட வாய்ப்புள்ளது. நெருங்கிய நண்பர்கள் உங்களை விட்டு பிரிந்து போவதற்கான வாய்ப்பு உள்ளது. அதனால் உங்கள் நட்பு வட்டாரத்தை மெயின்டைன் செய்யுங்கள். யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். அவை நமக்கு திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. அரசாங்க விஷயங்களிலும் கவனமாக இருங்கள். இந்த வாரம் முழுவதும் சிவனையும், விநாயகரையும் வழிபாடு செய்யுங்கள்.

Updated On 14 Oct 2024 10:00 PM IST
ராணி

ராணி

Next Story