2024 செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் செப்டம்பர் 16-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
சொந்த தொழில் செய்பவர்களுக்கு தொழில் தகராறு, தொழில் நிச்சயமற்ற தன்மை என்பது இருக்கிறது. அதற்காக தொழில் இல்லாமல் இல்லை. விட்டுவிட்டு நடக்கும். அதனால் உங்கள் வேலையில் முழுமையாக கவனம் செலுத்துங்கள். கிரக நிலைகள் சுமாராக இருப்பதால் சொத்துக்கள் வாங்க நினைப்பவர்கள் கொஞ்சம் கவனமாக இருங்கள். இளைய சகோதர - சகோதரிகள், நெருங்கிய உறவுகளால் நன்மை உண்டு. உங்களின் எண்ணங்கள், சிந்தனைகள் ஓரளவுக்கு செயலாக்கம் பெரும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு, உற்பத்திக்கு தகுந்த விற்பனை இருக்கிறது. ஆனால், லாபம் இல்லை. புதிய காதல் மலர வாய்ப்புள்ளது. ஏற்கனவே காதலித்தால் உங்கள் காதல் வெற்றியடைவதில் நிறைய தடைகள் இருக்கிறது. ஒருவேலை உங்கள் காதல் பிரேக் அப் ஆகவும் வாய்ப்புள்ளது. மணவாழ்க்கையை பொறுத்தவரை கணவன் - மனைவி உறவு சுமூகமாக இருந்தாலும், அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள், சண்டை சச்சரவுகள் ஏற்படும். சொந்த தொழில் நன்றாக உள்ளது. கூட்டுத்தொழிலில் பார்ட்னர் லாபம் அடைவார். உங்களின் கௌரவம், அந்தஸ்து, புகழ் கூடும். உங்கள் நட்பை இழக்க வேண்டிய காலம். அவர்கள் உங்களை விட்டு பிரிந்து போவார்கள். இந்த வாரம் முழுவதும் விநாயகரையும், அம்பாளையும் தரிசனம் செய்யுங்கள்.