2024 செப்டம்பர் 03-ஆம் தேதி முதல் செப்டம்பர் 09-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இடம், வீடு, வண்டி, வாகனம், கார், ஆடை, ஆபரணங்கள் வாங்க நினைத்தவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கிறது. இதற்காக கடன் வாங்க நினைப்பவர்களுக்கு கடன் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. நீங்கள் எவ்வளவு முயற்சிகள் எடுத்தாலும் அந்த முயற்சிகள் வெற்றியடைவதில் நிறைய தடைகள் இருக்கிறது. அதனால் உங்களின் எண்ணங்கள், ஆசைகள் மற்றும் அபிலாஷைகளை கொஞ்சம் குறைத்து கொள்ளுங்கள். அம்மா மற்றும் உங்களின் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு கொஞ்சம் அடக்கி வாசியுங்கள். செய்யும் வேலை எதுவாக இருந்தாலும் திருப்தியோடு செய்யுங்கள். ஏனென்றால் உங்கள் வேலையில் திருப்தியற்ற மனநிலை என்பது இருந்துகொண்டே இருக்கும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு, உற்பத்திக்கு தகுந்த விற்பனை இருக்கிறது. ஆனால், லாபம் இல்லை. கல்வியில் தடை என்பது இருந்து கொண்டே இருக்கிறது. அதனால் கல்வியில் கவனம் செலுத்துங்கள். மணவாழ்க்கையை பொறுத்தவரை கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடுகள், சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் உண்டு. அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். புதிய காதல் மலரும். அந்த காதல் வெற்றியடைவதிலும் சிக்கல்கள் இருக்கின்றன. ஜாதி, மதம், இனம், மொழிக்கு அப்பாற்பட்ட தொடர்புகள் ஏற்படும். எல்லா விஷயங்களிலும் கொஞ்சம் கவனமாகவே இருங்கள். எது எப்படி இருந்தாலும் உங்களின் கௌரவம், அந்தஸ்து, புகழ் காப்பாற்றப்படும். இந்த வாரம் முழுவதும் முருகனையும், மகாலட்சுமியையும் வழிபாடு செய்யுங்கள்.
