வெளிநாட்டுக்கு செல்வோர் எளிதில் பணமாற்றம் செய்ய நமது நாட்டில் இத்தனை வசதிகளா? - விளக்குகிறார் நிதி நிபுணர்

வெளிநாட்டு பணத்தேவை இருந்தால் உலக வங்கிகளைத்தான் நாடவேண்டி இருக்கும். அப்படி கடன் வாங்கும்பட்சத்தில் உலக நாடுகளின் மத்தியில் நமது நாட்டின் மதிப்பு குறைந்துவிடும். இதனால்தான் நிறைய பொருட்களை இறக்குமதி செய்து கடன் அதிகமாகும்போது fera fema-வானது அநாவசியமான பொருட்களை இறக்குமதி செய்ய தடைவிதித்துவிடுவார்கள். இதனால் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கான இடைவெளியானது குறைந்துவிடும்.

Update: 2024-06-17 18:30 GMT
Click the Play button to listen to article

பிசினஸ் குறித்து அதிகம் தெரிந்தவர்கள்தான் ஷேர் மார்க்கெட், மியூச்சுவல் ஃபண்டு போன்றவற்றில் முதலீடு செய்வார்கள் என்ற கருத்து சமீபகாலமாக மாறிவருகிறது. ஒவ்வொரு நாட்டிலும் சிறு, குறு தொழில்களை ஊக்குவிக்கவும், முதலீடுகளை அதிகரிக்கவும் பல்வேறு திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. குறிப்பாக, இந்தியா போன்ற அதிவேகமாக வளர்ந்துவரும் நாடுகளில் அந்நிய செலாவணியானது நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. பொருளாதாரத்தையும் மக்களின் வாழ்க்கைத்தரத்தையும் உயர்த்த பல்வேறு சலுகைகள் மக்களுக்கு வழங்கப்படுகின்றன. இதனால் தற்போது ஷேர் மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்டு போன்றவற்றில் முதலீடுகளின் எண்ணிக்கை கூடியிருக்கிறது. உலக வர்த்தக சந்தையில் இந்தியாவின் மதிப்பும் உயர்ந்திருக்கிறது. இதனிடையே பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடு செல்வோருக்கு அந்நிய செலாவணி அதிகரிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அதை எளிதில் பயன்படுத்தும் வகையிலும் திட்டங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதுகுறித்து நம்முடன் உரையாடுகிறார் அந்நிய செலாவணி நிதி நிபுணர் பிரபாகரன்.


Forex மார்க்கெட்டில் வெளிநாட்டு கரன்சியில் ட்ரேடிங் செய்யலாம்

ஷேர் மார்க்கெட், மியூச்சுவல் ஃபண்டு, போஸ்டல் சேவிங் போன்று Forex மார்க்கெட்டில் முதலீடு செய்யமுடியுமா?

Forex மார்க்கெட்டில் ட்ரேடிங்தான் பண்ணமுடியும். வெளிநாட்டு கரன்சியிலேயே டிரேடிங் செய்யவேண்டும் என்றால், வங்கியிலோ அல்லது அதுசார்ந்த புரோக்கரிடமோ சென்று ட்ரேடிங் அக்கவுண்டை தொடங்கவேண்டும். நம்முடைய கரன்சியை ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம் என எவ்வளவு மாதங்களுக்கு வேண்டுமானாலும் forward செய்துகொள்ளலாம். அதாவது அந்த குறிப்பிட்ட மாதங்களுக்குள் எப்போது வேண்டுமானாலும் நமது கரன்சியை விற்றுக்கொள்ளலாம். இதை Edging என்பார்கள். இதில் speculation மற்றும் edging என இரண்டு இருக்கிறது. ஒரு மாதம் கழித்து தேவை இருக்கிறதென்றால் முன்கூட்டியே தனது கரன்சிக்கான மதிப்பை தீர்மானித்து ஒரு மாதம் forward-க்கு புக் செய்துவிடுவார்கள். அந்த தேதியில் கரன்சியை எடுத்து தன்னிடம் export செய்தவரிடம் கொடுத்துவிடுவார்கள். Speculation என்பது டாலர், பவுண்ட், யூரோ என எந்த கரன்சியின் விலை ஒரு மாதம் கழித்து உயர வாய்ப்பு இருக்கிறதோ அதை முன்கூட்டியே 5000 டாலர், 10000 டாலர் என வாங்கிவிடுவார்கள். அதன் மதிப்பு உயரும்போது விற்றால் நல்ல லாபம் கிடைக்கும்.


பங்குகளின் செழிப்பைக் குறிக்கும் விலை ஏற்றம் காளை சந்தை - விலைகள் குறைந்து சரிவுக்கு செல்வது கரடி சந்தை

Cross currency market என்றால் என்ன?

இதில் நமது இந்திய நாட்டு கரன்சியை கொண்டுவர முடியாது. இரண்டு வெளிநாட்டு கரன்சிகளின் மதிப்பை ஒப்பிடுவதைத்தான் cross currency என்பார்கள். உதாரணத்திற்கு டாலர் மற்றும் பவுண்டு இரண்டின் மதிப்பையும் ஒப்பிடும்போது இரண்டுக்குமான value எவ்வளவு என்று பார்ப்பார்கள். இதில் முக்கியமாக fera - fema ரூல் என்று சொல்வார்கள். Balance of payment என்பதை வைத்துத்தான் ஒரு நாட்டின் பொருளாதார நிலைமையை சொல்லமுடியும். அதாவது ஏற்றுமதி செய்வதால் கிடைக்கும் வருமானமானது இறக்குமதி செய்யும் செலவைவிட அதிகமாக இருந்தால் நாட்டின் பொருளாதாரம் நன்றாக இருக்கிறது என்று அர்த்தம்.

இதை balance of payment பாசிட்டிவ் என்று சொல்வார்கள். அப்போது அந்நிய செலாவணி கையிருப்பானது அதிகமாக இருக்கும். அதுவே இறக்குமதி செய்யும் செலவு ஏற்றுமதியைவிட அதிகமாக இருந்தால் இதை நெகட்டிவ் என்று குறிப்பிடுவார்கள். அப்போது நாட்டின் நிதி நிலைமை நிலையாக இல்லை என்பார்கள். இதைக் கட்டுப்படுத்தத்தான் fera - fema ரூலை பயன்படுத்துகின்றனர். இந்திய பணம் தேவையென்றால் உள்நாட்டு வங்கிகளிலேயே வாங்கிவிட முடியும். ஆனால் வெளிநாட்டு பணத்தேவை இருந்தால் உலக வங்கிகளைத்தான் நாடவேண்டி இருக்கும். அப்படி கடன் வாங்கும்பட்சத்தில் உலக நாடுகளின் மத்தியில் நமது நாட்டின் மதிப்பு குறைந்துவிடும். இதனால்தான் நிறைய பொருட்களை இறக்குமதி செய்து கடன் அதிகமாகும்போது fera fema-வானது அநாவசியமான பொருட்களை இறக்குமதி செய்ய தடைவிதித்துவிடுவார்கள். இதனால் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கான இடைவெளியானது குறைந்துவிடும். மேலும் ஏற்றுமதியை ஊக்குவிக்க பல முயற்சிகளை எடுப்பார்கள். புதுப்புது தொழில்தொடங்க ஊக்குவிக்கும் வகையில் அரசானது சலுகை வழங்கும்.


Forex மார்க்கெட்டில் ஏற்படவிருக்கும் ஏற்ற இறக்கத்தை முன்கூட்டியே ஓரளவு கணிக்கலாம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஏற்றம், இறக்கம் காண்பதற்கான காரணம் என்ன?

பொருளாதார நிலையை பொருத்துதான் இதை சொல்லமுடியும். டாலரின் மதிப்பு அதிகரிக்கும்போது இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துவிடும். இதற்கு அமெரிக்காவின் பொருளாதாரம் வலுப்பெறுவதுதான் காரணம். நமது நாட்டின் பொருளாதாரமோ அல்லது பொருளாதார கொள்கைகளோ வலுவிழக்கும்போது இந்திய ரூபாயின் மதிப்பு குறையும். அதுவே பொருளாதாரம் வலுக்கும்போது ரூபாயின் மதிப்பும் கூடும்.

இந்தியாவில் பணமதிப்பிழப்பிற்கு பிறகு Forex மார்க்கெட் வளர்ச்சியடைந்திருக்கிறதா? அல்லது பின்நோக்கி சென்றுவிட்டதா?

Demonetization-க்கு பிறகு நமது Forex மார்க்கெட் முன்னேற்றம் கண்டிருக்கிறது. ஏற்றுமதி அதிகரித்திருக்கிறது. Demonetization-க்கும் Forex மார்க்கெட்டிற்கும் சம்பந்தம் இல்லையென்றாலும் அது நெறிமுறைகளை வழிப்படுத்தியிருக்கிறது. பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட சமயத்தில் வெளிநாட்டு கரன்சிகளை கொண்டுவந்து பணமாக தரும்படிதான் கேட்டார்கள். செக் கொடுத்தால் வேண்டாமென்று சொல்லிவிட்டார்கள். அந்த சமயத்தில் வெளிநாட்டு பணத்தின் மதிப்பு உயர்ந்திருந்த போதிலும் நமது நாட்டுப்பணம் இல்லாததால் Forex மார்க்கெட் பாதிக்கப்பட்டது.


வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தியர்கள் ரூபாயை வெளிநாட்டு கரன்சியாக மாற்றி எடுத்து செல்ல வேண்டும்

வெளிநாட்டுக்கு செல்லும் ஒருவர் இந்திய ரூபாயை டாலராக மாற்ற யாரை எப்படி அணுகவேண்டும்?

நமது நாட்டில் அனைவருமே வெளிநாட்டு பணத்தை எடுத்துச்செல்ல eligibility கொண்டுவந்திருக்கிறார்கள். பிரைவேட் விசிட், பிசினஸ் விசிட், படிப்பு, மருத்துவ தேவை என பல காரணங்களுக்காக வெளிநாடுகளுக்கு செல்லவேண்டி இருந்தால் அவர்களுக்கு அந்நிய செலாவணி வழங்கப்பட வேண்டும். ஆனால் இரண்டு, மூன்று வருடங்களுக்கு முன்பு நமது நாட்டில் அந்நிய செலாவணி கையிருப்பு வசதியாக இருந்ததால் liberalised remittance scheme கொண்டுவரப்பட்டது. அதன்படி, ஒரு தனிநபர் ஒரு நிதியாண்டில் 2,50,000 டாலர்வரை செலவு செய்யலாம். இதில் டூர், மேற்படிப்பு, மருத்துவ சிகிச்சை, இண்டர்நேஷனல் க்ளப், வெளிநாட்டு பத்திரிகைகளை வாங்குதல் என பல காரணங்களுக்காகவும் வெளிநாட்டுக்கு உங்கள் மூலமாக செலவாகும் தொகையை உங்களுடைய பான் கார்டின் அடிப்படையில் கணக்கிடுவர். அந்நிய செலாவணியை வாங்கச் செல்லும்போது, பாஸ்போர்ட், விசா, ரவுண்டு டிக்கெட், பான் கார்டு போன்ற ஆவண நகல்களை கொடுத்துவிட்டு, சம்பந்தப்பட்ட நபர்தான் அலுவலகத்திற்கு நேரில்சென்று அதை வாங்கவேண்டும். இப்போது டிராவல் கார்டுகள் வழங்கப்படுகின்றன. அதன்மூலம் வெளிநாட்டிற்கு சென்றபிறகும் இங்கிருந்தே அந்த கார்டை சார்ஜ் செய்துகொள்ளலாம். 

Tags:    

மேலும் செய்திகள்