வீட்டிலேயே செய்யலாம் பனீர் சப்பாத்தி!
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பனீர் சப்பாத்தியை வீட்ட்டிலேயே செய்து அசத்தலாம்.
By : ராணி
Update: 2023-08-21 18:30 GMT
செய்முறை:
- கோதுமை மாவில் தேவையான நீர்விட்டு, நெய் + எண்ணெய் கலவை மற்றும் சிறிது உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து உருண்டைகளாக்கவும்.
- மற்றொரு பவுலில், உதிர்த்த பனீரை சேர்த்து, அதனுடன் சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், தனி மிளகாய்த்தூள், மாங்காய்த்தூள், வெண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிசிறவும்.
- காரம் சற்று அதிகமாக தேவைப்படுவோர் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை சேர்த்துக்கொள்ளலாம்.
- பிசிறிவைத்த பனீர் கலவையை சிறுசிறு உருண்டைகளாக்கவும்.
- தேய்த்து வைத்திருக்கும் சப்பாத்தி நடுவே கலவை உருண்டையை வைத்து அதை மீண்டும் உருட்டி, கனமான சப்பாத்திகளாகத் தேய்க்கவும்.
- தவாவை அடுப்பில் வைத்து சூடானவுடன், தேய்த்து வைத்திருக்கும் சப்பாத்தியை போடவும்.
- ஒருமுறை திருப்பிப்போட்டு அதன்மீது நெய் + எண்ணெய் கலவையை சிறிது ஊற்றி வேகவிடவும்.
- இந்த சப்பாத்தியை ரோலாகவோ அல்லது ஆனியன் ரெய்தாவுடனோ சாப்பிட சுவையாக இருக்கும்.
டிப்ஸ்:
கனமான தவாவை பயன்படுத்தினால்தான் சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.
பனீருக்கு பதிலாக உருளைக்கிழங்கு, பாலக் கீரை, வெந்தயக் கீரை போன்றவற்றையும் ஸ்டஃபிங்கிற்கு பயன்படுத்தலாம்.