உடல் ஆரோக்கியத்தில் கவனம்

Update:2024-10-15 00:00 IST

2024 அக்டோபர் 15-ஆம் தேதி முதல் அக்டோபர் 21-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்களின் விருப்பம், ஆசை பூர்த்தியாகும். என்டெர்டெயின்மென்ட், டூர், டிராவலால் உங்களை அறியாத மகிழ்ச்சி என்பது இருந்துகொண்டே இருக்கும். பொருளாதார நிலைகளை பொறுத்தவரை உங்கள் கையில் பணம், தனம், பொருள் என்பது இருக்கும். நீண்ட நாட்களாக வீடு, இடம் மாற நினைத்தவர்களுக்கு இரண்டு மாற்றங்களும் உண்டு. நீண்ட நாட்களாக விற்பனையாகாமல் இருந்த சொத்துக்கள் நல்ல விலைக்கு போகும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த சேல்ஸ், வருமானம் இருக்கிறது. அம்மாவுடைய உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக இல்லாததால் பெரிய அளவில் ஷேர் மார்க்கெட், டிரேடிங், ஆன்லைன் பிசினஸ் போன்றவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் உங்கள் முயற்சியை விட்டுவிடுங்கள். வேலை, வாய்ப்புகள் பிரமாதமாக இருக்கிறது. எந்த அளவுக்கு முயற்சி எடுத்து வேலை செய்கிறீர்களோ, அதே அளவுக்கு வெற்றி பெற்ற நபராகவும் இருப்பீர்கள். வேறு அலுவலகம் மாற நினைப்பவர்கள் முயற்சி செய்யுங்கள். லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் அது கிடைப்பதில் நிறைய தடைகள் இருக்கின்றன. போட்டித்தேர்வுகள் எழுதி ரிசல்ட்டுக்காக காத்திருந்தாள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். மணவாழ்க்கையை பொறுத்தவரை, கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள்; பிரிவினைகள், யாராவது ஒருவருக்கு வைத்தியச் செலவுகள் ஆகியவை இருக்கிறது. இந்த வாரம் முழுவதும் விநாயகரையும், சிவனையும் வழிபாடு செய்யுங்கள்.  

Tags:    

மேலும் செய்திகள்