2025 புத்தாண்டு ராசி பலன்கள்! - ராம்ஜி குருஜியுடன் நேர்க்காணல்!

முடிந்தவரை வண்டியே ஓட்டாமல் இருப்பது நல்லது. 2-ஆம் வீட்டில் கேது வருவதால் உணவு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் தேவை. குறிப்பாக, தெரியாத உணவுகளை தவிர்த்துவிட்டு தெரிந்த உணவுகளை மட்டும் தேர்ந்தெடுத்து சாப்பிடவும்.

Update:2024-12-03 00:00 IST
Click the Play button to listen to article

புத்தாண்டை வரவேற்க அனைவரும் தயாராகி வருகிறோம். இந்த ஆண்டில் யார்யாருக்கெல்லாம் நல்ல வேலை கிடைக்கப்போகிறது? யாருக்கெல்லாம் காதல் கைகூடப் போகிறது? யாருக்கெல்லாம் குழந்தை பாக்கியம் கிட்டப்போகிறது? வேலை, வசதிகள் யாருக்கெல்லாம் வரும்? யாரெல்லாம் பிரச்சினைகளில் சிக்க போகிறார்கள்? என ஒவ்வொரு ராசிக்காரர்களுக்குமான 2025 புத்தாண்டு பலன்களை நமக்கு எடுத்துக்கூறுகிறார் பிரம்மஸ்ரீ ராம்ஜி பரமஹம்சர்.

மேஷம்

11-ஆம் வீட்டில் ராகு, 12-ஆம் வீட்டில் சனி மற்றும் 12-க்குரிய குரு மூன்றாம் வீட்டில் இருப்பதால் விபரீத ராஜ யோகம் கிட்டும். அதாவது கெடுதலே நடந்தாலும் அது நன்மையாக மாறிவிடும். வாழ்க்கையில் திடீரென ஏற்றம் இருக்கும். எதிரிகள் குறைந்து புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். வாழ்வில் முன்னேறுவதற்கான வழிகள் உண்டாகும்.


மேஷ ராசிக்காரர்களுக்கு ராஜ யோகமும் - ரிஷப ராசிக்காரர்களுக்கு முதலீடும் கிடைக்கும்

ரிஷபம்

2-ஆம் வீட்டில் குருபகவான் வருகிறார். காதல் மலரும். குடும்பத்தில் சண்டை வந்தாலும் மன்னிக்கும் மனப்பான்மை வேண்டும். பிரிந்துபோனவர்கள் இணைவார்கள். புதிய தொழிலுக்கு முதலீடு கிடைக்கும். கடை வைத்திருப்பவர்களுக்கு பிசினஸ் நன்றாக நடக்கும். 10-ஆம் வீட்டில் ராகுபகவான் வந்திருப்பதால் கணவன் - மனைவி சமாதானம் ஆகிவிட்டால் நன்மைதான்.

மிதுனம்

10-ஆம் வீட்டில் சனிபகவான் வருகிறார். வெகு பிரபல யோகம் உண்டாகும். குறிப்பாக, அரசியல்வாதிகளுக்கு பிரபலம் கிட்டும். 9-ஆம் வீட்டில் ராகு வருவதால் அப்பாவின் உடல்நலனில் கவனம் தேவை. ராசியில் குரு பகவான் அமர்ந்து 5, 7 மற்றும் 9-ஐ பார்க்கிறார். குழந்தையில்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். குரு பகவான் உடலில் உட்காருவதால் மதுபழக்கத்தை குறைத்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் கல்லீரல் பாதிப்பு ஏற்படும். எனவே ஜாக்கிரதையாக இருக்கவும்.


மிதுன ராசிக்காரர்களுக்கு குழந்தை பாக்கியமும் - கடக ராசிக்காரர்களுக்கு ஆன்மிக பற்றும் ஏற்படும் 

கடகம்

ராசியில் அஷ்டம சனி மற்றும் 10-இல் குரு இருந்ததால் தாங்கமுடியாத கஷ்டம் ஏற்பட்டிருக்கும். அவை அனைத்தும் இனி சரியாகும். புது வருடத்திற்கு பிறகு அஷ்டம சனி விலகுகிறார். குரு பகவான் 12-ஆம் வீட்டிற்கு வருவதால் இறை வழிபாடு அதிகமாகும். ஆன்மிகத்தில் பற்றுடையவர்கள் சன்னியாசம் போவதற்குக்கூட வாய்ப்புகள் உள்ளது. ஆன்மிகம் என்றால் என்னவென்றே தெரியாதவர்களுக்குக்கூட ஆன்மிக நாட்டம் ஏற்படும் என்பதால் அதனைத் தவிர்த்து குடும்பத்தின்மீதும், சம்பாத்தியத்தின் மீதும் கவனம் செலுத்தவேண்டும். ஸ்டண்ட் செய்தால் கட்டாயம் விபத்து ஏற்படும். முடிந்தவரை வண்டியே ஓட்டாமல் இருப்பது நல்லது. 2-ஆம் வீட்டில் கேது வருவதால் உணவு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் தேவை. குறிப்பாக, தெரியாத உணவுகளை தவிர்த்துவிட்டு தெரிந்த உணவுகளை மட்டும் தேர்ந்தெடுத்து சாப்பிடவும்.

சிம்மம்

அஷ்டம சனி 8-ஆம் வீட்டில் ரெடியாக இருக்கிறார். என்றோ செய்த தவறுக்கு பலன் கிடைக்கும். ஃபோனில் பேசும்போதும், ஃபோட்டோ, வீடியோக்கள் அனுப்பும்போதும் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவும். இல்லாவிட்டால், எடுத்துக்காட்டாக வாழ விரும்புபவர்களை எடுத்துக்காட்டி விடுவார்கள். முடிந்தவரை ஆண்கள் ஆண்களிடம் மட்டும், பெண்கள் பெண்களிடம் மட்டும் என தெரிந்தவர்களுடன் மட்டுமே பேசி பழகுவதே நல்லது.


சிம்ம ராசிக்காரர்களும் - கன்னி ராசிக்காரர்களும் எச்சரிக்கையாக இருக்கவும்

கன்னி

7-ஆம் வீட்டில் சனிபகவான் வருகிறார். காதல் திருமணம் நடக்கும். நட்பாக பேசிக்கொண்டிருக்கும் நபரின் வீட்டாரே வலுகட்டாயமாக இழுத்துகொண்டுபோய் திருமணம் செய்து வைத்துவிடுவார்கள். எனவே பெண்களிடம் பேசி பழகும்போது ஜாக்கிரதையாக இருக்கவும். வெளிநாட்டுக்கு செல்ல நினைப்பவர்களுக்கு ஆசை நிறைவேறும். அதிர்ஷ்டங்கள் அதிகம் கிட்டும். உடலில் இருக்கும் ரோகங்கள் சரியாகும். எழுச்சி உண்டாகும். பதவி பறிபோகும் நிலை உருவாகும். எனவே மேலதிகாரிகளிடம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவும். சிறுவர்களிடம் நட்பு உருவாகும். ஆனால் அவர்களுடன் சேராமல் இருப்பது நல்லது.

துலாம்

9-ஆம் வீட்டில் குரு வருகிறார். 6-ஆம் வீட்டில் சனி வருவதால் வியாதி, கடன், கஷ்டங்கள் உருவாகும். தேவையில்லாமல் எதிரிகள் உருவாவார்கள். எனவே வாயை கட்டுப்படுத்தவும். சமூக ஊடகங்களில் பகிர்வதில் ஜாக்கிரதையுடன் இருக்கவேண்டும். முடிந்தவரை எதையும் பகிரவேண்டாம். எல்லாவற்றையும் மிகவும் பொறுமையுடன் கையாளவும். தேவையில்லாத EMI வரும் என்பதால் கவனமுடன் இருக்கவும். அதேபோல் தேவையில்லாத எதிரிகளும் உருவாகுவார்கள். 9-ஆம் வீட்டிலிருக்கும் குரு பகவானால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். 5-இல் இருக்கும் ராகு பகவானால் அறுவை சிகிச்சை, IVF போன்றவை செய்யவேண்டி இருக்கும்.


துலாம் ராசிக்காரர்களுக்கு பொறுமை வேண்டும் - விருச்சிக ராசிக்காரர்களுக்கு பண பிரச்சினைகள் வரும்

விருச்சிகம்

பிறந்ததிலிருந்தே கஷ்டப்படக்கூடியவர்கள் இவர்கள். ஏதாவது ஒரு பிரச்சினை வந்து விருச்சிக ராசிக்காரர்களை பரபரப்பாகவே வைத்திருக்கும். 2-க்குரிய குரு பகவான் 8-ஆம் வீட்டில் மறைவதால் பெரிய பிசினஸ் செய்தாலும் தேவைக்கு கையில் பணமே இருக்காது. சொத்துகள் வந்து சேரும். பழைய சொத்துகள் கைக்கு வரும். கல்லீரல் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் கண்டிப்பாக வரும். உயர்கல்விகளுக்கு முயற்சிக்காமல் இருப்பது நல்லது. அதேசமயம் திறமைகளை வளர்த்துகொள்ள வேண்டும். 4-ஆம் வீட்டில் ராகு வருவதால் பெண்ணால் பெயர் கெடும். எனவே ஜாக்கிரதையாக இருங்கள். மனைவியிடம் பொய் சொல்லாதீர்கள். முடிந்தவரை பணத்தை கையில் வைத்துக்கொள்ளாமல் ஆன்லைன் பரிவர்த்தனை செய்வது நல்லது.

தனுசு

3-ஆம் வீட்டில் ராகு, 4-இல் சனி இருப்பதால் வீடு, மனை, பதவி உயர்வு போன்றவை தடைபடும். வேலைக்கு செல்லும் இடத்தில் வேலை பார்க்கவிடாமல் பிரச்சினை செய்வதற்காகவே ஒரு நபர் அங்கு இருப்பார். நல்ல விஷயங்கள் எதுவும் கண்ணுக்கு தெரியாமல் தவறுகள் மட்டுமே பிறர் கண்ணுக்கு தெரியும். இருப்பினும் பதவி உயர்வு கிடைக்கும். 7-இல் குரு பகவான் வருவதால் காதலிப்பவர்கள் அதை விட்டுவிட்டு ஒதுங்கிப்போவது நல்லது. பெற்றோர் பார்த்துவைக்கும் திருமணங்கள்தான் நடக்கும்.


தனுசு ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வும் - மகர ராசிக்காரர்களுக்கு லாபமும் கிடைக்கும்

மகரம்

3-ஆம் வீட்டில் சனிபகவான், 2-ஆம் வீட்டில் ராகு, 8-இல் கேது வருகிறார். பெரிய பணம் வந்துசேரும். அதிர்ஷ்டத்தினால் காரியங்கள் கைகூடும். நல்ல வியாபார யுக்தி தெரிந்தவர்களைவிட அதிர்ஷ்டம் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். விபரீத ராஜயோகம் உண்டாகும். திடீரென பதவி உயர்வு கிடைக்கும்.

கும்பம்

ராசியில் ராகுவும், 2-ஆம் வீட்டில் சனி பகவானும் வருகின்றனர். செல்வங்களும் குபேர வளங்களும் வந்து சேரும். ஐபிஎஸ், ஐஏஎஸ் போன்ற உயர்கல்வி பயில்பவர்களுக்கு எல்லாமே நன்மையாக முடியும். பணம் கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டும். நிறைய குழந்தைகள் பிறக்கும். தவறான விஷயங்கள்மீது மனம் போகும். குறிப்பாக, பெண்கள் தொடர்பு ஏற்படும். எனவே ஜாக்கிரதையாக இருங்கள்.


கும்ப ராசிக்காரர்களுக்கு குபேர வளங்களும் - மீன ராசிக்காரர்களுக்கு இரண்டு காதலும் வரும்

மீனம்

சனி பகவான் உடலில் உட்கார்ந்து 3, 7, 10-ஐ பார்க்கிறார். எனவே பெரும்புகழ் உண்டாகும். 12-இல் ராகு பகவான் வருவதால் இல்லற சுகங்களை ஏற்படுத்துவார். தேவையில்லாத வதந்திகள் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம். போலீஸ் கேஸ், பஞ்சாயத்து போன்றவைகளில் சிக்க வாய்ப்புகள் இருக்கிறது. 10-க்குரிய குரு பகவான் 4-ஆம் வீட்டில் வருகிறார். தொழில் ஸ்தானத்துக்கு அதிபதியான இவர் வருவதால் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். ஒரே நேரத்தில் இரண்டு காதல் வரும். எனவே தேவையில்லாமல் ஆசைப்பட்டு பிரச்சினையை உருவாக்க வேண்டாம். தீய நண்பர்கள் அறிமுகமாவார்கள். எனவே ஜாக்கிரதையாக இருங்கள்.

Tags:    

மேலும் செய்திகள்