இந்த வாரம் உங்க ராசிக்கு எப்படி?
முயற்சிகள் சுமார்
2025 மே 20-ஆம் தேதி முதல் 2025 மே 26-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்கள் கையில் பணம் இருந்தாலும், அதற்கேற்ப செலவுகளும் இருக்கும். தேவையற்ற விரயங்கள் மற்றும் நஷ்டங்களை சந்திக்க நேரிடலாம். எனவே, பணத்தை கவனமாக கையாளுவது அவசியம். வீடு, நிலம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உருவாகலாம். நீண்ட காலமாக வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை இருந்தால், அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள இது சாதகமான நேரம். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் இந்த வாரம் சுமாராக இருக்கும். எதிர்பார்க்கும் சில நல்ல செய்திகள் சாதகமாக அமையக்கூடும். எதிர்பார்த்த சில காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும். எதிர்பாராத பயணங்கள் ஏற்படலாம். இதன் காரணமாக செலவுகள் அதிகரிக்கக்கூடும். இளைய சகோதர-சகோதரிகளுடன் சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. விவசாயத்தில் இருப்பவர்களுக்கு ஓரளவுக்கு லாபமும், நல்ல மகசூலும் கிடைக்கும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு விற்பனை அதிகரிக்கும். நீங்கள் எந்த வேலையில் இருந்தாலும், உங்கள் பணியிடத்தில் முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். நீங்கள் செய்யும் முயற்சிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். பதவி உயர்வை எதிர்பார்த்துக் கொண்டிருந்தால், அது கிடைக்க வாய்ப்புள்ளது. சம்பள உயர்வு, போனஸ் போன்ற இதர பண பலன்களும் கிடைக்கக்கூடும். தொழில் சுமாராக இருக்கும். பெரிய முதலீடுகளை இந்த வாரம் தவிர்ப்பது நல்லது. இந்த வாரம் மகாலட்சுமி மற்றும் சனி பகவானை வழிபடுவது நல்ல பலன்களைத் தரும்.