திருப்பத்தூரில் நாளை வள்ளி எலும்பியல் மருத்துவமனை திறப்பு விழா நடைபெறவுள்ளதாக ரொட்டேரியன் கே. ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

சேலம் வள்ளி எலும்பியல் மருத்துவமனையின் ஒரு முக்கிய அங்கமாக திருப்பத்தூரில் வள்ளி மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இது கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் உள்ள ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ளது. இதன் திறப்பு விழா நாளை( ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இங்கு 24 மணி நேர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. குறிப்பாக 24 மணி நேர விபத்து காய சிகிச்சை பிரிவு, காய்ச்சல், ரத்த கொதிப்பு சர்க்கரை நோய் மருத்துவ பிரிவு ஆகியவை கைதேர்ந்த மருத்துவர்கள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நவீன மருத்துவ உபகரணங்களுடன் இந்த மருத்துவமனை கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3000 த்தின் 2024- 25 ம் ஆண்டுக்கான மீடியா பப்ளிசிட்டி ஆபிஸர் ரொட்டேரியன் கே. சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Updated On 4 May 2024 4:52 AM GMT
ராணி

ராணி

Next Story