இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இன்றைய தலைமுறையினர் பலருக்கும் சிறுதானியங்களிலுள்ள சத்துக்கள் குறித்து பெரிய அளவில் தெரிவதில்லை. சிறுதானியங்களை சாப்பிடுவதன்மூலம் ரத்த சோகை, சர்க்கரை நோய், இதய பிரச்சினை, கால்சியம் பற்றாக்குறை, புற்றுநோய் போன்ற பல வியாதிகளையும் கட்டுப்படுத்தலாம். சிறு தானியங்களில் ஒன்றான குதிரைவாலி சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சினை சரியாகும். செரிமான கோளாறு நீங்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சிறுநீரகக்கோளாறு நீங்கும். குறிப்பாக சர்க்கரை நோய் மற்றும் இதய பிரச்சினை உள்ளவர்களுக்கு சிறந்த உணவாகவும் கருதப்படுகிறது. இப்படி பல நன்மைகள் வாய்ந்த குதிரைவாலியில் சுவையான இனிப்பான குதிரைவாலி பாயசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.


செய்முறை:

  • முதலில் அடுப்பில் ஒரு வாயகன்ற கனமான பாத்திரத்தை வைத்து அரை லிட்டர் பால் (தண்ணீர் ஊற்றாமல்) ஊற்றி காய்ச்ச வேண்டும்.
  • ஒரு கிண்ணத்தில் குதிரைவாலியை சேர்த்து தண்ணீர் ஊற்றி 3 முதல் 4 முறை அலச வேண்டும். பாலை முழுமையாக கொதிக்கவிடாமல் சற்று காய்ச்சிய நிலையில் அலசிய குதிரைவாலியை பாலில் சேர்க்க வேண்டும்.
  • 10 - 15 நிமிடங்களுக்கு அடிபிடிக்காதவாறு பொறுமையாக கிளறவேண்டும். குதிரைவாலி வெந்து பால் நன்கு கொதித்து வரும்போது வெல்லத்தை சேர்க்க வேண்டும். வெல்லம் கரையும் வரை கிளறிவிட்டு சிறிதளவு ஏலக்காய்ப்பொடி சேர்க்க வேண்டும்.
  • பாயசம் கெட்டியாகும்வரை அதை கொதிக்கவிடலாம். பொதுவாகவே இந்த பாயசம் சீக்கிரமாக கெட்டியாகி விடும். எனவே பாயசம் கெட்டியாக இல்லாமல் சற்று நீர்போல் வேண்டும் என்பவர்கள் கூடுதலாக அரை தம்ளர் வெந்நீர் அல்லது 1 தம்ளர் ஆறின பால் சேர்த்துக்கொள்ளலாம்.
  • சூடான பால் சேர்த்தால் பாயசம் திரிந்துவிடும். பாயசம் முழுமையாக வெந்தவுடன் 1 சிட்டிகை குங்குமப்பூ, பச்சை கற்பூரம் சேர்த்து கலக்கிவிட்டு பாயசத்தை இறக்கிக்கொள்ளலாம்.
  • அடுத்ததாக அடுப்பில் வாணலியை வைத்து நெய் ஊற்றி முந்திரி, திராட்சையை பொன்னிறமாக வறுத்து இறக்கி வைத்த பாயசத்தில் சேர்த்து கலக்கினால் சூடான சுவையான குதிரைவாலி பாயசம் ரெடி.
Updated On 9 Oct 2023 6:56 PM GMT
ராணி

ராணி

Next Story