இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

வாழ்க்கையின் பல நல்ல தருணங்களை கேக் வெட்டி கொண்டாடுவது இப்போது மிகவும் ட்ரெண்டாக உள்ளது. கொரோனா காலகட்டத்தில்கூட பலரும் வீட்டிலேயே செய்து சுவைத்த ரெசிப்பிகளில் ஒன்றாக கேக்கைக் கூறலாம். பல பொருட்களை வைத்து கேக் செய்யலாம் என்றாலும் மலிவாகக் கிடைக்கக்கூடிய வாழைப்பழத்தை வைத்து வீட்டிலேயே சுலபமாக பனானா சாக்லேட் கேக் செய்வது எப்படி? பார்க்கலாம்.


செய்முறை:

  • முதலில் 300 கிராம் வாழைப்பழத்தை தோலுரித்து ஒரு பாத்திரத்தில் வைத்து, 5 நிமிடங்களுக்கு ஓவனில் வேகவைத்து எடுக்க வேண்டும்.
  • இதற்கிடையே கோதுமை மாவு, மில்லட் மிக்சர் பவுடர், பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், உப்பு சிறிதளவு என்று அனைத்தையும் ஒன்றாக சேர்த்து சலித்துக்கொள்ள வேண்டும்.
  • வேகவைத்த வாழைப்பழத்தை ஸ்பூன் அல்லது கரண்டியால் மசிக்க வேண்டும். அதில் எண்ணெய் சேர்த்து, மிக்ஸியில் மைய பேஸ்ட் போல் அரைத்துக்கொள்ள வேண்டும்.
  • அரைத்த கலவையுடன் நாட்டு சர்க்கரை மற்றும் சிறிது பெல்ஜியம் சாக்லேட் எசன்ஸ் சேர்த்து கலக்க வேண்டும். அதேபோல், சலித்து வைத்த மாவில் கோகோ பவுடர் சேர்த்து கலக்க வேண்டும். அந்த மாவை வாழைப்பழ பேஸ்ட்டில் சிறிது சிறிதாக சேர்த்து கட்டியில்லாமல் கிளற வேண்டும்.
  • பின்னர் ரெசிபியின் முக்கியப்பொருளான சாக்லேட்டை துண்டுதுண்டாக நறுக்கி சேர்த்து கிளற வேண்டும். இவற்றுடன் சிறிது நட்ஸ் மிக்சர், சாக்லேட் சிப்ஸ் சேர்த்து கிளறி, பேக்கிங் பேப்பரின் இருபுறமும் எண்ணெய் தடவி, ரொட்டி டின்னில் (loaf tin) வைத்து அதில் கேக் கலவையை சேர்த்து சமமாக பரப்ப வேண்டும்.
  • கேக் அழகாகவும் சுவையாகவும் இருக்க மீதமுள்ள நட்ஸ் மிக்சர் மற்றும் சாக்லேட் சிப்ஸை டாப்பிங்காக தூவி விடலாம். இறுதியாக மைக்ரோவேவ் ஓவனை 180℃-க்கு செட் செய்து சுமார் 30 நிமிடங்களுக்கு வேகவைத்து எடுத்தால் சூப்பரான பனானா சாக்லேட் கேக் ரெடி!
Updated On 25 Sep 2023 6:59 PM GMT
ராணி

ராணி

Next Story