இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

பொரியல், சாம்பாரில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிற காய்கறிகளில் ஒன்று முட்டைகோஸ். எந்தவகை ப்ரைடு ரைஸாக இருந்தாலும் அதில் முட்டைகோஸ் கட்டாயம் இடம்பெற்றிருக்கும். கலோரி குறைவு மற்றும் உடல் எடையை குறைக்க உதவும் உணவுகளில் ஒன்று இது. முட்டைகோஸில் முறுவலான சுவையான முட்டைகோஸ் பக்கோடா செய்வது எப்படி? என்ற ரெசிபியை இங்கு காண்போம்.முட்டைகோஸில் முறுவலான சுவையான முட்டைகோஸ் பக்கோடா செய்வது எப்படி? என்ற ரெசிபியை இங்கு காண்போம்.


செய்முறை:

  • முதலில் முட்டைகோஸில் கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, சோடா மாவு, மிளகாய்த்தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்க்க வேண்டும்.
  • சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, கறிவேப்பிலை மற்றும் இஞ்சியை மிக்ஸியில் போட்டு உதிரி உதிரியாக அரைத்துக்கொள்ள வேண்டும். சின்ன வெங்காயம் விரும்பாதவர்கள் பெரிய வெங்காயத்தை சிறிது சிறிதாக நறுக்கி மாவில் சேர்த்துக்கொள்ளலாம்.
  • அடுத்து அரைத்து வைத்திருக்கும் பேஸ்ட்டை கோஸ் கலவையில் சேர்த்து கோஸ் மாவுடன் சேரும்வரை நன்றாக பிசைய வேண்டும். வேண்டுமானால் கூடுதலாக முந்திரி, கீரை, கொத்தமல்லியையும் சேர்த்துக்கொள்ளலாம்.
  • இந்தக் கலவையை 5 நிமிடங்களுக்கு நன்றாக பிசைந்து விட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து பக்கோடா பதம் வரும்வரை மீண்டும் பிசைய வேண்டும்.
  • பின்னர் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடான பின்னர் கையில் சிறிது தண்ணீர் அல்லது எண்ணெய் தொட்டு கலந்துவைத்த மாவை எடுத்து பக்கோடாவாக கிள்ளிப் போடவேண்டும்.
  • அடுப்பை மிதமாக வைத்து 2 - 3 நிமிடங்கள் கழித்து மறுபக்கம் திருப்பிப்போட்டு பொன்னிறமாகும் வரை பக்கோடாவை வறுத்தெடுக்க வேண்டும்.
  • மாலை நேர காபி, டீயுடன் சாப்பிடுவதற்கு ஏற்ற சூடான மொறுமொறுப்பான முட்டைகோஸ் பக்கோடா ரெடி!
Updated On 16 Oct 2023 7:26 PM GMT
ராணி

ராணி

Next Story