இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

நமது அம்மா, பாட்டி போன்றோரின் திருமண ஆல்பங்களை பார்க்கும்போது அதில் பெரிய கொண்டையும், அதன்மீது பூக்களும், ஜடை அலங்காரங்களும் நிறைந்த ஒரு பேக் போஸ் போட்டோ கட்டாயம் இடம்பெற்றிருக்கும். இப்போது மணப்பெண் மேக்கப் மற்றும் ஹேர்ஸ்டைலில் பல்வேறு மாற்றங்களும், முன்னேற்றங்களும் ஏற்பட்டிருந்தாலும் பழைய ஹேர் ஸ்டைல் மீதான ஈர்ப்பு என்பது இன்னும் இருக்கத்தான் செய்கிறது. சிம்பிள் மேக்கப் போட்டிருக்கும் மணப்பெண்ணிற்கு பாரம்பரியமான முறையில் சிகை அலங்காரம் செய்தால் எப்படியிருக்கும்? செய்துகாட்டுகிறார் அழகுக்கலை நிபுணர் லலிதா.

அடர்த்தியான தலைமுடி இல்லாதவர்களுக்கு முன்பகுதியில் க்ரிம்பிங் செய்தால் முடி அடர்த்தியாக தெரியும்.

முதலில் முகத்திற்கு ஏற்றாற்போல் நெற்றிச்சுட்டி வைத்துக்கொள்ளலாம். அடுத்து மேல் பகுதியின் நடுப்பகுதியில் பகுதி பகுதியாக முடியை பிரித்து செட்டிங் பவுடர் போட்டு, பேக் கோம்ப் செய்யவேண்டும்.


க்ரிம்பிங் செய்த முடியில் பஃப் வைத்தல் - முன்பகுதியில் முடியை இழுத்துவிட்டு பஃபை சரிசெய்தல்

அதேபோல் நெற்றியின் இரண்டு பக்கங்களிலும் முடியை பேக் கோம்ப் செய்யவேண்டும். இப்படிச் செய்தால் முடி அடர்த்தியாக தெரியும். வேண்டுமானால் காதின் இரு ஓரங்களிலும் tail ஹேர் விட்டுக்கொள்ளலாம்.

பிறகு மேல்பகுதி முழுவதும் பேக் கோம்ப் செய்துவிட்டு, அதனை சீவி பஃப் வைத்து பின் செய்யவேண்டும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக இழுத்துவிட்டு பஃபை சரிசெய்து யு-பின் போட்டு அதன்மேல் செட்டிங் ஸ்ப்ரே அடிக்கவேண்டும். இப்போது முன்பகுதி ஹேர்ஸ்டைல் முடிந்துவிட்டது.


ஹேர் டோனட்டை முடிக்குள் செட் செய்தல் - எக்ஸ்டன்ஷன் முடியை வைத்து பின்னல் போடுதல்

அடுத்து பின்பகுதியில் கொண்டை போட்டு பூ வைக்கலாம். அதற்கு முதலில் மேல்பகுதியில் பின் செய்திருக்கும் முடியை எடுத்து ரப்பர்பேண்ட் போடவேண்டும். பேண்ட் போட்ட முடிக்குள் ஹேர் டோனட் என்று சொல்லக்கூடிய கொண்டை பன்னை நுழைத்து, பேண்ட் போட்டிருக்கும் முடி அனைத்தையும் அந்த டோனட்டை சுற்றி வைத்து பின் செய்யவேண்டும். இப்படி செய்தால்தான் பூ வைக்கும்போது அது வெளியே அழகாகத் தெரியும்.

மீதமிருக்கும் முடி அடர்த்தி குறைவாக இருந்தால், எக்ஸ்டன்ஷன் முடியை வைத்து பின்னவேண்டும். இப்போது முன்பகுதியில் பஃபை சரிசெய்ய குத்தியிருக்கும் யு-பின்களை எடுத்துவிட வேண்டும்.


கொண்டையை சுற்றி மல்லிகைப்பூ வைத்தல் - சிவப்பு பூவை யு-பின் பயன்படுத்தி செட் செய்தல்

மேலே போட்டிருக்கும் சிறிய கொண்டையை சுற்றி மல்லிகைப்பூ வைத்து விழாமல் பின் செய்யவேண்டும். மல்லிகைப்பூவை சுற்றி சிவப்புநிற பூவை வைக்கவேண்டும். கொண்டையின் நடுவில் சிறு நகை அல்லது பூவால் அலங்காரம் செய்யலாம். தாமரைப்பூவின் இதழ்களை தனித்தனியாக எடுத்து சிறிய யு-பின்னை பயன்படுத்தி உள்ளே வைத்திருக்கும் கொண்டை பன்னில் பின் செய்தால் பார்க்க மிகவும் அழகாக இருக்கும். நடுவில் மட்டும் சிறிய ஜுவல் ஒன்றை வைத்தால் அலங்காரம் முழுவதும் முடிந்துவிடும்.


தாமரை இதழ்களால் கொண்டையை அலங்கரித்தல் - நடுப்பகுதியில் ஜுவல் வைத்தல்

பின்னியிருக்கும் முடியில் இடைவெளிவிட்டு ஜுவல் வைத்தாலோ அல்லது பூவை சுற்றினாலோ பாரம்பரியமான மணப்பெண் சிகை அலங்காரம் ரெடி!

Updated On 22 April 2024 6:18 PM GMT
ராணி

ராணி

Next Story